திங்கள், 30 மார்ச், 2015

அடுத்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை எட்ட 9ம் வகுப்பில் 'வடிகட்ட' உத்தரவு

அடுத்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், 100 சதவீத தேர்ச்சியை எட்டுவதற்காக, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை, 'வடிகட்ட', தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நடப்பு (2014 - 15) கல்வி ஆண்டின் துவக்கத்தில் இருந்தே, அரசு பள்ளி மாணவ, மாணவியர், 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என, கல்வித்துறை கெடுபிடி காட்டி வந்தது.இதற்கேற்ப, காலாண்டு, அரையாண்டுத் தேர்வு முடிவுகள் அடிப்படையில், மதிப்பெண் குறைந்த மாணவர்களை கணக்கெடுத்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கவும், அவர்களின் முன்னேற்றத்தை கண்காணிக்கவும், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.'தேர்ச்சி விகிதம் குறையும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்ற அதிகாரிகளின் மறைமுக மிரட்டல்களால், தலைமை ஆசிரியர்கள், கடும் மன உளைச்சல் அடைந்தனர்.பிளஸ் 2 தேர்வில், ஓரளவிற்கு, எதிர்பார்த்த, 'ரிசல்ட்' வந்து விடுகிறது. ஆனால், 10ம் வகுப்பு முடிவு, கல்வித்துறைக்கு திருப்தி அளிக்கவில்லை. இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டத்தின்படி, எட்டாம் வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' என்பதால், தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத மாணவர்களும், ஒன்பதாம் வகுப்புக்கு வந்து விடுகின்றனர். மாணவர்களை 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற வைப்பது, ஆசிரியர்களுக்கு பெரிய சவாலான விஷயமாக உள்ளது.'பத்தாம் வகுப்பு தேர்வில், 100 சதவீத தேர்ச்சியை எட்ட வேண்டும் எனில், ஒன்பதாம் வகுப்பில், சரியாக படிக்காத மாணவர்களை, 'வடிகட்ட' வேண்டியது முக்கியம். இந்த உத்தரவை, நடப்பு கல்வி ஆண்டில் இருந்தே கடைபிடிக்க வேண்டும்' என, கல்வித்துறை அதிகாரிகள், வாய்வழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.எனவே, சமீபத்தில், ஒன்பதாம் வகுப்பு தேர்வை எழுதிய மாணவர்களில், அதிக மதிப்பெண் பெறாத மாணவ, மாணவியரை, 'பெயில்' செய்ய, தலைமை ஆசிரியர்கள் முடிவு எடுத்துள்ளனர்.இதனால், அடுத்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை குறையலாம். ஆசிரியர் கூறுவது என்ன? ஆசிரியர் சிலர் கூறியதாவது: ஒன்பதாம் வகுப்பில், சரியாக படிக்காத மாணவர்களை, 'பெயில்' செய்வதன் மூலம், தேர்ச்சி பெறக்கூடிய மாணவர்கள் மட்டுமே, 10ம் வகுப்பில் இடம் பெறுவர். இதனால், 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் கணிசமாக அதிகரிக்கும். துறையின் புதிய உத்தரவால், கடந்த ஆண்டை விட (2013 - 14), நடப்பு கல்வியாண்டில் (2014 - 15), ஒன்பதாம் வகுப்பில் அதிக மாணவர்கள், 'பெயில்' ஆக வாய்ப்புள்ளது, என்றனர். - நமது சிறப்பு நிருபர் -- THANKS: DINAMALAR 30.03.2015

புதன், 11 பிப்ரவரி, 2015

கணிதத்தில் மொத்தமாக மதிப்பெண் அள்ளுவது எப்படி?

கணிதத்தில் மொத்தம் 200 மதிப்பெண்களில் ‘அ’ பிரிவில் ஒரு மதிப்பெண் வினாக்கள் - 40; ‘ஆ’ பிரிவில் ஆறு மதிப்பெண் வினாக்கள் -10; ‘இ’ பிரிவில் 10 மதிப் பெண் வினாக்கள் -10 என வகைப் படுத்தியுள்ளனர். கணித பாடப் புத்தகத்தில் Volume 1 மற்றும் Volume 2-ல் உள்ள 271 ஒரு மதிப்பெண் வினாக்களில் இருந்து பொதுத் தேர்வுக்கு 30 வினாக்கள் கேட்கப்படும். மீதி பள்ளிக் கல்வி துறை மூலம் வெளியிடப்பட்டுள்ள காம் (com) புத்தகத்தில் இருந்து எட்டு ஒரு மதிப்பெண் வினாக்களும், 2 வினாக் கள் மாணவர்கள் சிந்தித்து விடை யளிக்கும் விதமாக, கணித புத்தகத்தில் இருந்தும் கேட்கப்படும். பிளஸ் 2 கணித புத்தகம் பத்து தலைப்பு களை உள்ளடக்கியுள்ளது. இதில் அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் தலைப்பில் 26 மதிப்பெண்களை அள்ள லாம். இதில் ஒரு மதிப்பெண் வினா நான்கும், 6 மதிப்பெண் வினா இரண் டும், 10 மதிப்பெண் வினா ஒன்றும் கேட்கப்படும். பாடப்புத்தகத்தில் கொடுக்கப்பட்ட சமன்பாட்டு தொகுப்பை நேர்மாறு அணி முறையில் தீர்க்க, அணி கோவை முறையை பயன்படுத்தி தீர்க்க, தர முறையை பயன்படுத்தி தீர்வு காண வேண்டும். எ.கா., கேள்வி எண் 1.26; 1.28. பயிற்சி கணக்கு எண் 1.5-ல் இருந்து இரண்டு மற்றும் மூன்றாவது கேள்விகளை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். வெக்டார் இயற்கணிதத்தில் ஒரு மதிப்பெண் ஆறு வினாவும், ஆறு மதிப் பெண் இரண்டு வினாவும், 10 மதிப் பெண் இரண்டு வினா என மொத்தம் 38 மதிப்பெண்களுக்கான கேள்வி கேட்கப்படும். ஆறு மதிப்பெண் கேள்வி களுக்கு பாடப் புத்தகத்தின் பயிற்சி 2.1 முதல் 2.11 வரை பயிற்சி செய்ய வேண்டும். 10 மதிப்பெண் வினாக்களுக்கு, சைன் (ஏ+பி), சைன் (ஏ-பி), காஸ் (ஏ+பி) மற்றும் காஸ் (ஏ-பி) ஆகியவற்றை வெக்டார் முறையில் நிரூபித்தல் கணக்கை பயிற்சி செய்வது அவசியம். முக்கோணத்தின் ஒரு புள்ளி வழியே செல்லும் குத்துக்கோடுகள் குறித்த வினாக்களுக்கு பயிற்சி 2.5 வினாவும், 5 மற்றும் 12 வினாக்களையும் பார்க்க வேண்டும். வெட்டும் புள்ளி காணுதலில் எ.கா., எண் 2.44, 2.7 மற்றும் 3 ஆகிய கேள்விகளையும், தளங்களின் வெக்டர் மற்றும் கார்ட்டீசியன் சமன்பாடு காணுதலில் எ.கா., கேள்வி 2.50, 2.51, 2.52 ஆகியவற்றையும், பயிற்சியில் 2.8 மற்றும் 7 முதல் 14 வினா வரை படித்துக் கொள்ளுங்கள். கலப்பு எண்கள் தலைப்பில் நான்கு ஒரு மதிப்பெண், இரண்டு ஆறு மதிப் பெண், ஒரு பத்து மதிப்பெண் என 26 மதிப்பெண்களுக்கு கேள்வி கேட்கப் படும். ஆறு மதிப்பெண் வினாக்களுக்கு பயிற்சி 3.4 மற்றும் 2,4,7,9 ஆகிய கேள்வி களை பார்த்தல் அவசியம். எ.கா., பகுதியில் 3.10, 3.19, 3.20 ஒமேகா கணக்குகளையும் படிக்கவும். பத்து மதிப்பெண்களில் பயிற்சி 3.2-ல் 8-வது வினாவும், 3.4 மற்றும் 3.5-ல் பத்து மதிப்பெண் வினாவை கவனத்தில் கொள்ள வேண்டும். பகுமுறை வடிவ கணிதம் தலைப்பில் நான்கு ஒரு மதிப்பெண் வினாக்களும், ஆறு மதிப்பெண் வினா ஒன்றும், பத்து மதிப்பெண் வினா மூன்று என 40 மதிப்பெண்களுக்கான கேள்வி கேட்கப்படும். 10 மதிப்பெண்கள் பெற்றிட, இந்த பகுதியில் 13-வது செய் முறை கணக்கை நன்றாக பயிற்சி செய்யவும். பயிற்சி கணக்கு 4.4ல் 5 மற்றும் 6-ம் வினாக்களும், பயிற்சி கணக்கில் 4.5-ல் 2-ம் வினா வும், 4.6-ல் மூன்றாம் வினாவும் முக்கியம். பரவளையம், நீள்வட்டம், அதிபர வளையம் ஆகியவற்றின் மையம், குவியம், இயக்குவரை, செவ்வகத்தின் நீளம் காணுதல் ஆகிவற்றை அறிந்து கொண்டால் 3 பத்து மதிப்பெண் வினாக்கள் மூலம் 30 மதிப்பெண்கள் பெறுவது உறுதி. வகைநுண்கணிதம் தலைப்பில் நான்கு ஒரு மதிப்பெண் வினாவும், 2 ஆறு மதிப்பெண் வினாவும், இரண்டு 10 மதிப்பெண் வினா என 36 மதிப்பெண்களுக்கு கேள்வி கேட்கப் படும். ஆறு மதிப்பெண் வினாவுக்கு பயிற்சி 5.1ல் இருந்து 5.11 வரையிலான கேள்விகளையும், 10 மதிப்பெண் வினாக்களுக்கு பயிற்சி எண் 5.1, 5.2 மற்றும் 5.10 மற்றும் எ.கா., பகுதி கணக்குகளை பார்த்துக் கொள்ளவும். வகை நுண்கணிதம் தலைப்பில் 2 ஒரு மதிப்பெண் வினாவும், ஒரு ஆறு மதிப்பெண் வினாவும், ஒரு 10 மதிப்பெண் வினா என 18 மதிப்பெண் களுக்கு கேள்விகள் வரும். ஆறு மதிப்பெண் பெற எ.கா., பகுதியில் 6.5, 6.7, 6.15, 6.16, 6.19 கணக்குகளையும், பயிற்சி வினா 6.3-ல் மூன்றில் நான் காவது வினாவையும், நான்கில் 1, 2 ஆகிய வினாக்களையும் படித்துக் கொள்ளுங்கள். 10 மதிப்பெண் பெற்றிட வளைவரை வரைதல், யூலரின் தேற்றத்தின் பயன்பாடு சார்ந்த கணக்கு களை படிக்கவும். தொகை நுண்கணிதம் - பயன்பாடுகள் தலைப்பில் 4 ஒரு மதிப்பெண் வினா, 6 மதிப்பெண்ணில் ஒரு வினாவும், 10 மதிப்பெண்ணில் இரண்டு வினா என 30 மதிப்பெண்களுக்கு கேள்வி வரும். ஆறு மதிப்பெண்ணுக்கு பயிற்சி கணக் கில் 7.1 முதல் 7.3 வரையும், எ.கா., கணக்குகளும் அவசியம். 10 மதிப் பெண் பெற பயிற்சி எண் 7.5-ல் உள்ள நான்கு கணக்குகள், எ.கா., கணக்கை படித்துக் கொள்ளவும். பரப்பு, கன அளவு கண்டுபிடிக்கக்கூடிய எ.கா., பயிற்சி கணக்குகளை பார்க்கவும். வகைக்கெழுச் சமன்பாடுகள் தலைப் பில் நான்கு ஒரு மதிப்பெண் வினாவும், ஆறு மதிப்பெண்ணில் ஒரு வினாவும், பத்து மதிப்பெண்ணில் இரண்டு வினா என 30 மதிப்பெண்களுக்கு கேள்வி கேட்கப்படும். ஆறு மதிப்பெண் கேள்விக்கு பயிற்சி எண்: 8.1, 8.2, 8.4 மற்றும் எ.கா., கணக்குகளை படிக்கவும். பத்து மதிப்பெண் பெற பயிற்சி எண்: 8.2, 8.4, 8.6, 8.5 மற்றும் எ.கா., கணக்குகளை பார்க்கவும். தனிநிலை கணக்கியல் தலைப்பில் நான்கு ஒரு மதிப்பெண் வினா, ஆறு மதிப்பெண் வினா இரண்டும், பத்து மதிப்பெண்ணில் ஒரு வினா என 26 மதிப்பெண்களுக்கு கேள்வி கேட்கப்படும். ஆறு மதிப்பெண் பெற்றிட மெய்மை அட்டவணை கணக்கு அனைத்தையும் படிக்க வேண்டும். குலத்திற்கான பண்புகள், கெய்லி அட்டவணை மூலம் குலம், அபிலியன் குலம் காணலாம். பத்து மதிப்பெண்ணில் கெய்லி அட்டவணை மூலம் குலம், அபிலியன் குலம் காணு தல், அணி சார்ந்த கணக்குகள் (ஸ்டார்) வகை கணக்குகளை படிக்கவும். நிகழ்தகவுப் பரவுதல் தலைப்பில் நான்கு ஒரு மதிப்பெண் வினாவும், ஆறு மதிப்பெண்ணில் இரண்டு வினா, பத்து மதிப்பெண்ணில் ஒரு வினா என 26 மதிப்பெண்களுக்கு கேள்வி கேட்கப்படும். இதில் ஆறு மதிப்பெண் பெற, கணிதவியல், எதிர்பார்த்தல், ஈருறுப்பு பரவல், பாய்சன் பரவல் ஆகிய பகுதிகளை சார்ந்த ஆறு மதிப்பெண் வினாவையும், 10.1ல் வினா எண் 4,5,6,9 ஆகிய கணக்கை படிக்கவும். பத்து மதிப்பெண் பெற எ.கா., 10.2, 10.3, 10.30, 10.31 கணக்குகள், பயிற்சி 10.1ல் ஏழாவது கணக்கும், 10.5ல் உள்ள அனைத்தையும் படிக்க வேண்டும்.

வெற்றி மதிப்பெண் தரும் வேதியியல்!

வேதியியல் தேர்வில் 1 மதிப் பெண் கேள்விகள் 30. அனைத்துக்கும் பதிலளிக்க வேண்டும். 3 மதிப்பெண் கேள்விகள் 21. அதில் 15 வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும். 5 மதிப்பெண் கேள்விகள் 12. அதில் 7 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். சில கட்டுப்பாடுகள் உண்டு. அதாவது, இந்த 12 வினாக்களும் தலா 4 கேள்விகளைக் கொண்ட 3 பிரிவு களாக பிரிக்கப்பட்டிருக்கும். இந்த ஒவ்வொரு பிரிவிலும் இருந்து குறைந் தது 2 கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். கடைசியாக 10 மதிப்பெண் கேள்வி கள் 6. இதில் 3 கேள்விகளுக்குப் பதில் அளித்தால் போதும். தேர்வுக்குத் தயாராவது எப்படி? ஒவ்வொரு பாடத்திற்கும் பின்னால் இருக்கும் கேள்விகளை மட்டும் படித்தாலே, பாஸ் மார்க் வாங்கி விடலாம். காரணம், இந்தக் கேள்விகளில் இருந்தே தேர்வுக்கு 60 சதவீதம் கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்று விதியிருக்கிறது. உதாரண மாக, ஒரு மதிப்பெண் கேள்வியைப் பொருத்தவரையில் மொத்தமுள்ள 30 கேள்விகளில், 20 முதல் 22 கேள்விகள் இவ்வாறுதான் கேட்கப்படுகின்றன. நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்றால் 2006-ம் ஆண்டு முதல் 2014 வரை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு கேள்வித்தாள்களில் வந்த கேள்விகளையும் படிக்க வேண்டியது அவசியம். சில எளிய ஐடியாக்களை மனத்தில் வைத்துக் கொள்வது சவால் களை எளிமையாக்கும். உதாரணமாக, ஆக்சினைடுகளின் (அயனிகளின்) நிறங்கள் குறித்த கேள்வி குழப்பம் தரலாம். அதற்கு சாலையில் உள்ள சிக்னல் விளக்கை ஞாபகம் வைத்துக் கொள்ளலாம். U3+ பிளஸ் அயனியின் நிறம் என்ன? என்று கேட்டால், சிக்னல் விளக்கில் 3 எழுத்துள்ள நிறம் எது என்று யோசித்து (RED) சிகப்பு என்று விடை எழுதலாம். UO என்ற கேள்விக்கு சிக்னல் விளக்குகளில் ‘ஓ’ என்ற எழுத்து வரும் ஒரே நிறம் ‘யெல்லோ’ என்பதால், மஞ்சள் என்று விடை தரலாம். எஞ்சியிருக்கும், U 4 பிளஸ் அயனியின் நிறம் பச்சை. சமன்பாடுகளை விரைவாக எழுத வும், அதனை பூர்த்தி செய்யவும் சில எண்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக சில்வர் அல்லது காப்பர், நீர்த்த நைட்ரிக் அமிலத்துடன் இணை என்று கேள்வி வந்தால், காப்பருக்கு 3, 8 என்றும், சில்வருக்கு 3, 4 என்றும் எண்களை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் சமன்பாட்டின் இடதுபுறத் தையும், வலது புறத்தையும் சமப்படுத்த ரொம்பவே உதவியாக இருக்கும். ஒரு மதிப்பெண் கேள்விகளைப் பொருத்தவரையில், தொகுதி 1 புத்தகத் தில் இருந்து 15 கேள்விகளும், தொகுதி 2-ல் இருந்து 15 கேள்விகளும் வரும். 2-வது தொகுதியில் மொத்தம் 12 பாடங்கள் உண்டு. இதில், 14, 15, 22 ஆகிய பாடங்களில் இருந்து ஒரு வினா கூட கேட்கப்படாது. அதேபோல 11, 13, 16, 18, 19 ஆகிய பாடங்களில் இருந்து தலா 1 கேள்வி தான் வரும். எனவே, புக் மார்க் (பாடத்திற்கு பின்னால் உள்ள) வினாக்களை மட்டும் படித்தாலே போதும். அதே நேரத்தில் 12, 17, 20, 21 ஆகிய 4 பாடங்களை மட்டும் முழுமையாக படிப்பது அவசியம். காரணம், இந்த 4 பாடங்களில் இருந்து மட்டும் 12 கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்த முறைகளை பின்பற்றினால் ஒரு மதிப் பெண் வினாக்களில் 30-க்கு 30 எடுத்து விடலாம். அடுத்து 3 மதிப்பெண் கேள்விகள். வேதியியல் பாடத்தில் கனிம வேதியியல், இயற்பியல் வேதியியல், கரிம வேதியியல் என்று முப்பெரும் பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவில் இருந்தும் 7 வினாக்கள் கேட்கப்படுகிறது. 21-ல் 15 கேள்விகளுக்கு பதில் அளித் தால் போதும் என்பதால், கரிம வேதி யியல் பாடத்தில் இருந்து ஒரே ஒரு கேள்வி தானே என்று நினைப்பீர்கள். ஆனால், அந்தப் பாடத்தைப் படிக்காத வர்கள் கட்டாயமாக அந்த ஒற்றைக் கேள்வியில் மதிப்பெண்ணை இழப் பார்கள். இதனை தவிர்க்க எளிய வழி இருக் கிறது. இதுவரை வந்த பொதுத் தேர்வு வினாக்களை படித்துவிடுங்கள். அதிலிருந்துதான் அதிக கேள்விகள் கேட்கப்படும் 3, 4, 11, 16-ம் பாடங் களை நன்றாக படிக்க வேண்டும். அதைப்போல, 15, 22 ஆகிய பாடங் கள் மிகவும் சிறிய பாடங்கள். அதை யும் படித்துவிட்டால், நிச்சயமாக 2 கேள் விகளுக்குப் பதில் அளிக்க முடியும். 5 மதிப்பெண் கேள்விகள் 5 மதிப்பெண் கேள்விகளைப் பொருத்தவரையில் ஏற்கெனவே சொன்னபடி, 3 பிரிவுகளாக கேள்விகள் வரும். ‘ஏ’ பிரிவில் 1, 4, 5, 6 ஆகிய 4 பாடங்களில் இருந்து தலா 1 கேள்வி கேட்கப்படும். ‘பி’ பிரிவில் 9, 10, 11, 14 ஆகிய பாடங்களில் இருந்தும், ‘சி’பிரிவில் 17, 18, 19, 22 ஆகிய பாடங்களில் இருந்தும் தலா 1 கேள்வி கேட்கப்படும். வினை வழிமுறைகள் பற்றிய கேள்வி உறுதியாக வரும். 18, 19ம் பாடங்களில் மொத்தம் 6 வினை வழிமுறைகள் தான் உள்ளன. அதில் இருந்து 1 வினை வழிமுறை கட்டாயமாக வந்துவிடும். எனவே, இதனை கவனமாக படியுங்கள். இதில், அம்புக்குறிகள், பிளஸ், மைனஸ் என்று நிறைய குறிகள் வரும். அவற்றை எல்லாம் மிகச் சரியாக எழுதுவது அவசியம். இதில் ஏதாவது சந்தேகம் வந்தால் இந்தக் கேள்வியை தவிர்த்துவிட்டு வேறு எளிதான கேள்விக்குப் போய்விடுங்கள். கடைசியாக 10 மதிப்பெண் கேள்வி. ஒவ்வொரு கேள்வியும் ஏ, பி என்று இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கும். ஒரு கேள்வியை தேர்வு செய்தால் இரண்டு உட்கேள்விகளுக்கும் பதில் அளித்தே தீர வேண்டும். விதிப்படி, 64-வது கேள்வி 2, 3-ம் பாடத்தில் இருந்து தேர்வு செய்யப்படுகிறது. அதாவது 64-ஏ 2-ம் பாடத்தில் இருந்தும், 64-பி 3-ம் பாடத்தில் இருந்தும் இடம்பெறும். அதேபோல 65-வது கேள்வி 6, 7-ம் பாடங்களில் இருந்தும், 66-வது கேள்வி 8, 12-ம் பாடங்களில் இருந்தும், 67 கேள்வி 11, 14-ம் பாடங்களில் இருந்தும், 68-வது கேள்வி 15, 19 பாடங்களில் இருந்தும், 69-வது கேள்வி 20, 21 பாடங்களில் இருந்தும் கேட்கப்படுகின்றன. 10 மதிப்பெண் வாங்க நினைப்பவர்கள், இங்கே ஜோடி ஜோடியாக குறிப்பிட்டுள்ள இரு பாடங்களையும் படிக்க வேண்டும். ஜோடியில் ஒரு பாடத்தை விட்டுவிட்டு, ஒரு பாடத்தை மட்டும் படித்தால் 10க்கு 10 வாங்கவே முடியாது. வேதியியல் வினாத்தாளின் கடைசி கேள்வி 70-வது கேள்வி. இது கட்டாயம் பதிலளிக்க வேண்டிய கேள்வி. ஆனால், 70 ‘ஏ மற்றும் பி’ அல்லது ‘பி மற்றும் சி’க்கு பதில் அளித்தால் போதும் என்ற சலுகை உண்டு. ஏ கேள்வி 16-ம் பாடத்தில் இருந்தும், பி கேள்வி 4-ம் பாடத்தில் இருந்தும் இடம்பெறும். அதேபோலவே சி கேள்வி 18-ம் பாடத்தில் இருந்தும், டி கேள்வி 13-ம் பாடத்தில் இருந்தும் கேட்கப்படும். இந்த நுட்பங்களை எல்லாம் அறிந்து படிப்பது, 200க்கு 200 பெற நிச்சயமாக உதவும். ஆர். அழகப்பன், வேதியியல் பாடத்தில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர், மதுரை

இயற்பியலில் வெல்லும் சூட்சுமம் அறிவோம்!

இயக்கவியலை கற்பிக்கக் கூடிய இயற்பியல் பாடத்தை படிக்கும் போதே பல மாணவர்களுக்கு இதயமும், மூளையும் படபடவென துடித்து இயங்கும். கடினமான பொருளை இலகுவாக இயக்குவதற்கான அடிப்படையை வகுத்துள்ள இயற்பியல் பாடத்தை மிகவும் எளிமையான முறையில் படிப்பதன் மூலம், பொதுத் தேர்வில் சாதிக்க இயலும். இயற்பியல் பாடத்தில் செயல்முறைத் தேர்வுக்கு 50 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. மீதியுள்ள 150 மதிப்பெண்களுக்கு ஒரு மதிப்பெண் வினாக்கள் 30; மூன்று மதிப்பெண் வினாக்கள் 15; ஐந்து மதிப் பெண் வினாக்கள் 7; பத்து மதிப்பெண் வினாக்கள் 4 என கேள்வித் தாளில் கேட்கப்படும். 30 மதிப்பெண் உங்கள் கையில் ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு முதல் வால்யூமில் இருந்து 66 கேள்வி களையும், இரண்டாம் வால்யூமில் இருந்து 68 கேள்விகளையும் நன்றாக படித்துக்கொள்ள வேண்டும். புத்த கத்தில் ஒவ்வொரு பாடத்தின் பின் பகுதியில் இருந்தும் 15 கேள்விகள் கேட்கப்படுகின்றன. மீதி 12 கேள்விகள் பிடிஏ மூலம் வெளியிடப்பட்ட புத்த கத்தில் இருந்தும், மூன்று மதிப் பெண்கள் மாணவர்களின் சிந்த னையை பரிசோதிக்கும் விதமாக பாடப் புத்தகத்தில் இருந்தும் கேட்கப் படுகின்றன. இவ்வாறு இயற்பியல் பாடத்தை பிரித்து படிப்பதன் மூலம் 30 மதிப்பெண்களையும் முழுவதுமாக அள்ளலாம். 3 மதிப்பெண் வினாவை படிக்க முத்தான வழி மூன்று மதிப்பெண் வினாக்களை பொருத்தவரை 15 தியரி கேள்விகளும், ஐந்து கேள்விகள் கணக்கு வகை (problem) சார்ந்தும் இருக்கும். இதில் அதிகபட்சமாக 9-வது பாடத்தில் 4 தேற்றம், 3 தியரியும் ஒரு கணக்கு வகை யும் வரும். 2-வது பாடத்தில் 2 தியரியும், ஒரு கணக்கும் வரும். பாடங்கள் 1, 4, 5, 6, 8 ஆகியவற்றில் இருந்து 2 கேள்வி யும், 3, 7, 10 பாடங்களில் இருந்து ஒரு கேள்வியும் கேட்கப்படும். புத்தகத் தில் உள்ள 3 மதிப்பெண் கணக்குகளை நன்கு படித்துக்கொள்ள வேண்டும். ஐந்து மதிப்பெண்களை அள்ள எளிய முறை ஐந்து மதிப்பெண் கேள்வியில் மொத்தம் 12 வினாக்களில் ஏழு கேள்வி களுக்கு பதில் அளிக்க வேண்டும். இதில் ஆறு தியரி கேள்விக்கும், கட்டாயமாக ஒரு கணக்கு (problem) வினாவுக்கும் பதில் எழுத வேண்டும். பழைய வினாத் தாளை ஆய்வு செய்யும் போது, ஒரு கேள்வி புத்தகத்தின் பின்புறம் உள்ள எ.கா. பகுதியில் இருந்தும், மற்றொரு கேள்வி புத்தகத் தின் பின்புறம் உள்ள பயிற்சி கணக்கில் இருந்தும் கேட்கப்படுவதை அறிய முடிகிறது. எனவே, புத்தகத்தில் உள்ள அனைத்து ஐந்து மதிப்பெண் வினாக்களையும் ஒரு முறை பார்த்துக் கொள்வது நன்று. புத்தகத்தில் உள்ள உதாரண கணக்குகளை நன்கு படித் துக் கொள்வதால், கட்டாயமாக (compulsory problem) எழுத வேண்டிய கணக்குகளுக்கான ஐந்து மதிப்பெண் களை எளிய முறையில் பெறலாம். 2-வது பாடத்திலும் 7-வது பாடத்திலும் இரண்டு 5 மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படுகிறது. மற்ற பாடங்களில் இருந்து ஒவ்வொரு வினாக்கள் மட்டும் கேட்கப்படும் என்பதை மனதில் கொண்டு படிக்க வேண்டும். 10 மதிப்பெண் பதற்றமின்றி வினாவுக்கு விடையளிக்கலாம் பாடப்புத்தகத்தில் 2-வது, 7-வது பாடங்களில் இருந்து 10 மதிப்பெண் வினா கேட்கப்பட மாட்டாது. மற்ற பாடங்களில் இருந்து தலா ஒரு வினா என 8 வினாக்கள் கேட்கப்படும். இவற்றில் 4 வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டும். 1, 4, 6, 8 ஆகிய 4 பாடங்களை படித்தால் நான்கு கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும் என்ற தவறான மனப்போக்கு மாணவ, மாணவியரிடம் நிலவி வருகிறது. ஆனால், 3, 5, 9 ஆகிய பாடங்களில் உள்ள சில முக்கியமான 10 மதிப்பெண் வினாக்களை படிப்பதால், நமக்கு தெரிந்த மிகச்சிறிய கேள்விக்கு விடை அளித்து, முழு மதிப்பெண்களான 40 மதிப்பெண்களையும் பெற இயலும். சூட்சமத்தை தெரிந்துகொள்ளுங்கள் மூன்று மதிப்பெண் வினாக்களில் கேட்கப்படும் ஃபார்முலாக்களை நேரடி யாக எழுத வேண்டும். இதில் ஒரு மதிப்பெண் ஃபார்முலாவுக்கும், ஒரு மதிப்பெண் பிரதியிடுதலுக்கும், ஒரு மதிப்பெண் விடை அலகுக்கு என 3 மதிப்பெண் பிரித்து அளிக்கப்படுகிறது. ஐந்து மதிப்பெண் வினாவில் நேரடியாக கேட்கப்பட்ட ஃபார்முலாவை கேள்விக்கு ஏற்ற வகையில் மாணவர்கள் மாற்றி அமைத்து எழுத வேண்டும். அதன் பின்னரே பிரதியீடு செய்து, விடை அலகுடன் எழுத வேண்டும். இயற்பியலில் குறைந்தபட்சம் 100 மதிப்பெண்களை பெற வேண்டும் என நினைப்பவர்கள் எழுதிய விடையை ஐந்து நிமிடமாவது கட்டாயம் திருப்பி பார்க்க வேண்டும். அப்போது தான் கவனக்குறைவால் செய்த சிறு சிறு பிழைகளை கண்டறிந்து, திருத்தம் செய்துகொண்டு முழு மதிப்பெண் பெற வாய்ப்பாக அமையும். தேர்வை சீரான வேகத்தில் எழுத வேண்டும். படம் தெளிவாக வரைந்து, அதில் உள்ள பாகங்களை புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை போன்றே எழுத வேண்டும். உங்களின் கையெழுத்து ஆசிரியர் புரிந்துகொண்டு படிக்கும் வகையில் எழுத வேண்டும் என்பதை நினைவில் கொள்க. இவ்வாறு ஒன்று, மூன்று, ஐந்து மற்றும் 10 மதிப்பெண் வினாக்களை படிக்கும் மாணவ, மாணவியர் எளிய முறையிலான சூட்சுமத்தை தெரிந்து கொண்டு தேர்வுக்கு தயாராவதன் மூலம் 150 மதிப்பெண்களை தவறவிடாமல் பெறலாம். ‘இனிது இனிது தேர்வு இனிது’ தொடரைப் படித்துப் பயனடைந்து வரும் மாணவர்களுக்காக, ‘தி இந்து’ தமிழ் நாளிதழும் www.plus1plus2.com இணையதளமும் இணைந்து - கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் அளிக்கும் மற்றும் ஒரு வழிகாட்டுதல்... www.plus1plus2.com என்னும் இந்த இணையதளம், வல்லுநர்களால் தொகுக்கப்பட்ட மாதிரி வினாத்தாள்களையும் விடைகளையும் தருகிறது. இந்த கட்டண சேவையை நீங்கள் இலவசமாகவே படிக்கலாம். இந்தச் சலுகையைப் பெற விரும்பும் மாணவர்கள் நாளை ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளியாகும் விளம்பரத்தைப் பார்க்கவும். அதில் அளிக்கப்படும் எண்ணுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினால், ஒரு கடவுச் சொல் (password) அனுப்பிவைக்கப்படும். அதன் மூலம் இணைய தளத்தினுள் சென்று மாதிரி வினா- விடைகளைப் படித்துப் பயன் பெறலாம்.

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

நுகர்வோரே விழித்திரு ! உங்களுக்கு தெரியுமா??

உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா ??? ______________________________ NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள். _____________________________ உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா ??? FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது. ______________________ உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா ??? VICKS பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட ்டு வருகிறது. _____________________________ உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா ??? LIFE BOUY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப்பும் அல்ல. ஆனால், அது ஒரு cabolic சோப்பு, மிருகங்களை குளிப்பாட்ட பயன்படுவது. ஐரோப்பாவில், அது நாய்களை குளிப்பாட்ட பயன்படுகிறது, ஆனால், நம் நாட்டில் ? மாப்ளே, நீ எந்த சோப்பு போட்ற? _______________________ உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா ??? COKE மற்றும் PEPSI ஆகியவை, உண்மையில், கழிவறையை சுத்தம் செய்பவை. அதில் 21 மாறுபட்ட விஷம் கலந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், அதன் விற்பனை, இந்திய பாராளுமன்றத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அப்போ, இந்தியாகாரன் எல்லாம் இளிச்சவாயனா? இனிமே டிவி ல, coke குடிங்க, பெப்சி குடிங்கன்னு எவனாச்சும் வரட்டும், மவனே, நாஸ்தி தான். ____________________ உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா ??? வெளிநாட்டு கம்பனிகள் ஊட்டச்சத்து மிக்க பானம் என்று, பூஸ்ட், காம்ப்ளான், HORLICKS, மல்டோவா, PROTINEX ஆகியவற்றை விற்கின்றன. ஆனால், அதை, இந்தியாவில் டெல்லியில் ALL INDIA INSTITUTE (இந்தியாவில் உள்ள மிக பெரிய பரிசோதனை சாலை) இல், பரிசோதித்தபோது, நிலகடலையிளிருந் து எண்ணையை பிரித்தெடுத்த பிறகு வரும் கழிவிலிருந்து தயாரிக்கபடுகிறது. அது, விலங்குகள் உணவாகும். இந்த கழிவிலிருந்தே, ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கிறார்கள். __________________________ உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா ??? ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பத்து மணி நேர தொடர்ச்சியான அறுவை சிகிச்சை நடந்தது. அவரது, பெரிய கணையத்தை மருத்துவர்கள் அறுத்து, அகற்றி விட்டார்கள். அதன் பிறகு, மருத்துவர்கள், அது கெட்டு போக காரணம், coke மற்றும் பெப்சி குடித்ததே என்று. அதிலிருந்து, அவர் பெப்சி, coke ஆகிய விளம்பரங்களுக்கு நடிப்பதில்லை. __________________________________ உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா ??? PIZZA பற்றி பார்ப்போம். PIZZA விற்கும் கம்பனிகள் "Pizza Hut, Dominos, KFC, McDonalds, Pizza Corner, Papa John’s Pizza, California Pizza Kitchen, Sal’s Pizza" இவை அமெரிக்கன் கம்பனிகள். PIZZA சுவையாக இருக்க வேண்டி, E-631 என்ற flavor Enhancer சேர்க்கபடுகிறது. இது, பன்றி, கோழி இறைச்சியில் இருந்து தயாரிக்கபடுகிறத ு. ● கீழ்கண்ட குறியீடுகள், உங்கள் உணவு பாக்கெட்களில் கானபட்டால், அதில் என்னென்ன கலந்திருக்கும் ? E 322 – எருது E 422 – ஆல்கஹால் E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல் E 471 – எருது & ஆல்கஹால் E 476 – ஆல்கஹால் E 481 – எருது & கோழி E 627 – ஆபத்தான கெமிக்கல் E 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி E 631 – பன்றி கொழுப்பிலிருந்த ு தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு. ● Note – இந்த code களை, பெரும்பாலான வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில் காணலாம். அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும் மாகி (ஆமா, ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே, அதேதான்) ● நுகர்வோரே, விழித்து கொள்ளுங்கள் !!! ● மாகி யில், flavor (E-635 ) என்ற code இருக்கும். ● கூகிள் இல், கீழ்கண்ட code களையும் தேடி பாருங்கள், இவை அனைத்துமே, ஒவ்வொன்றாய் குறிக்கும் :- E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904. தயவு செய்து உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிருங்கள். !!! இயற்கையாய் இயற்கையோடு வாழ..! இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..! ஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்..! மனிதநேய விதைகளாய் மாறுவோம்..