வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015
கல்விச் செய்தி: TNPSC தேர்வுக்கு தயாராவது எப்படி? - பீனிக்ஸ் தமிழன...
கல்விச் செய்தி: TNPSC தேர்வுக்கு தயாராவது எப்படி? - பீனிக்ஸ் தமிழன...: மதிப்பிற்குறிய நண்பர்களே, அரசு பணிக்கு மட்டுமே செல்ல துடிக்கும் நண்பர்களே அரசு பணிக்கு செல்வதற்கு தகுந்த திட்டமிடல் இருந்தால...
புதன், 26 ஆகஸ்ட், 2015
ஞாயிறு, 24 மே, 2015
சனி, 11 ஏப்ரல், 2015
திங்கள், 30 மார்ச், 2015
அடுத்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை எட்ட 9ம் வகுப்பில் 'வடிகட்ட' உத்தரவு
அடுத்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், 100 சதவீத தேர்ச்சியை எட்டுவதற்காக, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை, 'வடிகட்ட', தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நடப்பு (2014 - 15) கல்வி ஆண்டின் துவக்கத்தில் இருந்தே, அரசு பள்ளி மாணவ, மாணவியர், 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என, கல்வித்துறை கெடுபிடி காட்டி வந்தது.இதற்கேற்ப, காலாண்டு, அரையாண்டுத் தேர்வு முடிவுகள் அடிப்படையில், மதிப்பெண் குறைந்த மாணவர்களை கணக்கெடுத்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கவும், அவர்களின் முன்னேற்றத்தை கண்காணிக்கவும், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.'தேர்ச்சி விகிதம் குறையும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்ற அதிகாரிகளின் மறைமுக மிரட்டல்களால், தலைமை ஆசிரியர்கள், கடும் மன உளைச்சல் அடைந்தனர்.பிளஸ் 2 தேர்வில், ஓரளவிற்கு, எதிர்பார்த்த, 'ரிசல்ட்' வந்து விடுகிறது. ஆனால், 10ம் வகுப்பு முடிவு, கல்வித்துறைக்கு திருப்தி அளிக்கவில்லை. இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டத்தின்படி, எட்டாம் வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' என்பதால், தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத மாணவர்களும், ஒன்பதாம் வகுப்புக்கு வந்து விடுகின்றனர்.
மாணவர்களை 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற வைப்பது, ஆசிரியர்களுக்கு பெரிய சவாலான விஷயமாக உள்ளது.'பத்தாம் வகுப்பு தேர்வில், 100 சதவீத தேர்ச்சியை எட்ட வேண்டும் எனில், ஒன்பதாம் வகுப்பில், சரியாக படிக்காத மாணவர்களை, 'வடிகட்ட' வேண்டியது முக்கியம். இந்த உத்தரவை, நடப்பு கல்வி ஆண்டில் இருந்தே கடைபிடிக்க வேண்டும்' என, கல்வித்துறை அதிகாரிகள், வாய்வழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.எனவே, சமீபத்தில், ஒன்பதாம் வகுப்பு தேர்வை எழுதிய மாணவர்களில், அதிக மதிப்பெண் பெறாத மாணவ, மாணவியரை, 'பெயில்' செய்ய, தலைமை ஆசிரியர்கள் முடிவு எடுத்துள்ளனர்.இதனால், அடுத்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை குறையலாம்.
ஆசிரியர் கூறுவது என்ன?
ஆசிரியர் சிலர் கூறியதாவது: ஒன்பதாம் வகுப்பில், சரியாக படிக்காத மாணவர்களை, 'பெயில்' செய்வதன் மூலம், தேர்ச்சி பெறக்கூடிய மாணவர்கள் மட்டுமே, 10ம் வகுப்பில் இடம் பெறுவர். இதனால், 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் கணிசமாக அதிகரிக்கும். துறையின் புதிய உத்தரவால், கடந்த ஆண்டை விட (2013 - 14), நடப்பு கல்வியாண்டில் (2014 - 15), ஒன்பதாம் வகுப்பில் அதிக மாணவர்கள், 'பெயில்' ஆக வாய்ப்புள்ளது, என்றனர்.
- நமது சிறப்பு நிருபர் --
THANKS: DINAMALAR 30.03.2015
புதன், 11 பிப்ரவரி, 2015
கணிதத்தில் மொத்தமாக மதிப்பெண் அள்ளுவது எப்படி?
கணிதத்தில் மொத்தம் 200 மதிப்பெண்களில் ‘அ’ பிரிவில் ஒரு மதிப்பெண் வினாக்கள் - 40; ‘ஆ’ பிரிவில் ஆறு மதிப்பெண் வினாக்கள் -10; ‘இ’ பிரிவில் 10 மதிப் பெண் வினாக்கள் -10 என வகைப் படுத்தியுள்ளனர்.
கணித பாடப் புத்தகத்தில் Volume 1 மற்றும் Volume 2-ல் உள்ள 271 ஒரு மதிப்பெண் வினாக்களில் இருந்து பொதுத் தேர்வுக்கு 30 வினாக்கள் கேட்கப்படும். மீதி பள்ளிக் கல்வி துறை மூலம் வெளியிடப்பட்டுள்ள காம் (com) புத்தகத்தில் இருந்து எட்டு ஒரு மதிப்பெண் வினாக்களும், 2 வினாக் கள் மாணவர்கள் சிந்தித்து விடை யளிக்கும் விதமாக, கணித புத்தகத்தில் இருந்தும் கேட்கப்படும்.
பிளஸ் 2 கணித புத்தகம் பத்து தலைப்பு களை உள்ளடக்கியுள்ளது. இதில் அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் தலைப்பில் 26 மதிப்பெண்களை அள்ள லாம். இதில் ஒரு மதிப்பெண் வினா நான்கும், 6 மதிப்பெண் வினா இரண் டும், 10 மதிப்பெண் வினா ஒன்றும் கேட்கப்படும். பாடப்புத்தகத்தில் கொடுக்கப்பட்ட சமன்பாட்டு தொகுப்பை நேர்மாறு அணி முறையில் தீர்க்க, அணி கோவை முறையை பயன்படுத்தி தீர்க்க, தர முறையை பயன்படுத்தி தீர்வு காண வேண்டும். எ.கா., கேள்வி எண் 1.26; 1.28. பயிற்சி கணக்கு எண் 1.5-ல் இருந்து இரண்டு மற்றும் மூன்றாவது கேள்விகளை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
வெக்டார் இயற்கணிதத்தில் ஒரு மதிப்பெண் ஆறு வினாவும், ஆறு மதிப் பெண் இரண்டு வினாவும், 10 மதிப் பெண் இரண்டு வினா என மொத்தம் 38 மதிப்பெண்களுக்கான கேள்வி கேட்கப்படும். ஆறு மதிப்பெண் கேள்வி களுக்கு பாடப் புத்தகத்தின் பயிற்சி 2.1 முதல் 2.11 வரை பயிற்சி செய்ய வேண்டும். 10 மதிப்பெண் வினாக்களுக்கு, சைன் (ஏ+பி), சைன் (ஏ-பி), காஸ் (ஏ+பி) மற்றும் காஸ் (ஏ-பி) ஆகியவற்றை வெக்டார் முறையில் நிரூபித்தல் கணக்கை பயிற்சி செய்வது அவசியம். முக்கோணத்தின் ஒரு புள்ளி வழியே செல்லும் குத்துக்கோடுகள் குறித்த வினாக்களுக்கு பயிற்சி 2.5 வினாவும், 5 மற்றும் 12 வினாக்களையும் பார்க்க வேண்டும். வெட்டும் புள்ளி காணுதலில் எ.கா., எண் 2.44, 2.7 மற்றும் 3 ஆகிய கேள்விகளையும், தளங்களின் வெக்டர் மற்றும் கார்ட்டீசியன் சமன்பாடு காணுதலில் எ.கா., கேள்வி 2.50, 2.51, 2.52 ஆகியவற்றையும், பயிற்சியில் 2.8 மற்றும் 7 முதல் 14 வினா வரை படித்துக் கொள்ளுங்கள்.
கலப்பு எண்கள் தலைப்பில் நான்கு ஒரு மதிப்பெண், இரண்டு ஆறு மதிப் பெண், ஒரு பத்து மதிப்பெண் என 26 மதிப்பெண்களுக்கு கேள்வி கேட்கப் படும். ஆறு மதிப்பெண் வினாக்களுக்கு பயிற்சி 3.4 மற்றும் 2,4,7,9 ஆகிய கேள்வி களை பார்த்தல் அவசியம். எ.கா., பகுதியில் 3.10, 3.19, 3.20 ஒமேகா கணக்குகளையும் படிக்கவும். பத்து மதிப்பெண்களில் பயிற்சி 3.2-ல் 8-வது வினாவும், 3.4 மற்றும் 3.5-ல் பத்து மதிப்பெண் வினாவை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பகுமுறை வடிவ கணிதம் தலைப்பில் நான்கு ஒரு மதிப்பெண் வினாக்களும், ஆறு மதிப்பெண் வினா ஒன்றும், பத்து மதிப்பெண் வினா மூன்று என 40 மதிப்பெண்களுக்கான கேள்வி கேட்கப்படும். 10 மதிப்பெண்கள் பெற்றிட, இந்த பகுதியில் 13-வது செய் முறை கணக்கை நன்றாக பயிற்சி செய்யவும். பயிற்சி கணக்கு 4.4ல் 5 மற்றும் 6-ம் வினாக்களும், பயிற்சி கணக்கில் 4.5-ல் 2-ம் வினா வும், 4.6-ல் மூன்றாம் வினாவும் முக்கியம். பரவளையம், நீள்வட்டம், அதிபர வளையம் ஆகியவற்றின் மையம், குவியம், இயக்குவரை, செவ்வகத்தின் நீளம் காணுதல் ஆகிவற்றை அறிந்து கொண்டால் 3 பத்து மதிப்பெண் வினாக்கள் மூலம் 30 மதிப்பெண்கள் பெறுவது உறுதி.
வகைநுண்கணிதம் தலைப்பில் நான்கு ஒரு மதிப்பெண் வினாவும், 2 ஆறு மதிப்பெண் வினாவும், இரண்டு 10 மதிப்பெண் வினா என 36 மதிப்பெண்களுக்கு கேள்வி கேட்கப் படும். ஆறு மதிப்பெண் வினாவுக்கு பயிற்சி 5.1ல் இருந்து 5.11 வரையிலான கேள்விகளையும், 10 மதிப்பெண் வினாக்களுக்கு பயிற்சி எண் 5.1, 5.2 மற்றும் 5.10 மற்றும் எ.கா., பகுதி கணக்குகளை பார்த்துக் கொள்ளவும்.
வகை நுண்கணிதம் தலைப்பில் 2 ஒரு மதிப்பெண் வினாவும், ஒரு ஆறு மதிப்பெண் வினாவும், ஒரு 10 மதிப்பெண் வினா என 18 மதிப்பெண் களுக்கு கேள்விகள் வரும். ஆறு மதிப்பெண் பெற எ.கா., பகுதியில் 6.5, 6.7, 6.15, 6.16, 6.19 கணக்குகளையும், பயிற்சி வினா 6.3-ல் மூன்றில் நான் காவது வினாவையும், நான்கில் 1, 2 ஆகிய வினாக்களையும் படித்துக் கொள்ளுங்கள். 10 மதிப்பெண் பெற்றிட வளைவரை வரைதல், யூலரின் தேற்றத்தின் பயன்பாடு சார்ந்த கணக்கு களை படிக்கவும்.
தொகை நுண்கணிதம் - பயன்பாடுகள் தலைப்பில் 4 ஒரு மதிப்பெண் வினா, 6 மதிப்பெண்ணில் ஒரு வினாவும், 10 மதிப்பெண்ணில் இரண்டு வினா என 30 மதிப்பெண்களுக்கு கேள்வி வரும். ஆறு மதிப்பெண்ணுக்கு பயிற்சி கணக் கில் 7.1 முதல் 7.3 வரையும், எ.கா., கணக்குகளும் அவசியம். 10 மதிப் பெண் பெற பயிற்சி எண் 7.5-ல் உள்ள நான்கு கணக்குகள், எ.கா., கணக்கை படித்துக் கொள்ளவும். பரப்பு, கன அளவு கண்டுபிடிக்கக்கூடிய எ.கா., பயிற்சி கணக்குகளை பார்க்கவும்.
வகைக்கெழுச் சமன்பாடுகள் தலைப் பில் நான்கு ஒரு மதிப்பெண் வினாவும், ஆறு மதிப்பெண்ணில் ஒரு வினாவும், பத்து மதிப்பெண்ணில் இரண்டு வினா என 30 மதிப்பெண்களுக்கு கேள்வி கேட்கப்படும். ஆறு மதிப்பெண் கேள்விக்கு பயிற்சி எண்: 8.1, 8.2, 8.4 மற்றும் எ.கா., கணக்குகளை படிக்கவும். பத்து மதிப்பெண் பெற பயிற்சி எண்: 8.2, 8.4, 8.6, 8.5 மற்றும் எ.கா., கணக்குகளை பார்க்கவும்.
தனிநிலை கணக்கியல் தலைப்பில் நான்கு ஒரு மதிப்பெண் வினா, ஆறு மதிப்பெண் வினா இரண்டும், பத்து மதிப்பெண்ணில் ஒரு வினா என 26 மதிப்பெண்களுக்கு கேள்வி கேட்கப்படும். ஆறு மதிப்பெண் பெற்றிட மெய்மை அட்டவணை கணக்கு அனைத்தையும் படிக்க வேண்டும். குலத்திற்கான பண்புகள், கெய்லி அட்டவணை மூலம் குலம், அபிலியன் குலம் காணலாம். பத்து மதிப்பெண்ணில் கெய்லி அட்டவணை மூலம் குலம், அபிலியன் குலம் காணு தல், அணி சார்ந்த கணக்குகள் (ஸ்டார்) வகை கணக்குகளை படிக்கவும்.
நிகழ்தகவுப் பரவுதல் தலைப்பில் நான்கு ஒரு மதிப்பெண் வினாவும், ஆறு மதிப்பெண்ணில் இரண்டு வினா, பத்து மதிப்பெண்ணில் ஒரு வினா என 26 மதிப்பெண்களுக்கு கேள்வி கேட்கப்படும். இதில் ஆறு மதிப்பெண் பெற, கணிதவியல், எதிர்பார்த்தல், ஈருறுப்பு பரவல், பாய்சன் பரவல் ஆகிய பகுதிகளை சார்ந்த ஆறு மதிப்பெண் வினாவையும், 10.1ல் வினா எண் 4,5,6,9 ஆகிய கணக்கை படிக்கவும். பத்து மதிப்பெண் பெற எ.கா., 10.2, 10.3, 10.30, 10.31 கணக்குகள், பயிற்சி 10.1ல் ஏழாவது கணக்கும், 10.5ல் உள்ள அனைத்தையும் படிக்க வேண்டும்.
வெற்றி மதிப்பெண் தரும் வேதியியல்!
வேதியியல் தேர்வில் 1 மதிப் பெண் கேள்விகள் 30. அனைத்துக்கும் பதிலளிக்க வேண்டும். 3 மதிப்பெண் கேள்விகள் 21. அதில் 15 வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும். 5 மதிப்பெண் கேள்விகள் 12. அதில் 7 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். சில கட்டுப்பாடுகள் உண்டு. அதாவது, இந்த 12 வினாக்களும் தலா 4 கேள்விகளைக் கொண்ட 3 பிரிவு களாக பிரிக்கப்பட்டிருக்கும்.
இந்த ஒவ்வொரு பிரிவிலும் இருந்து குறைந் தது 2 கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். கடைசியாக 10 மதிப்பெண் கேள்வி கள் 6. இதில் 3 கேள்விகளுக்குப் பதில் அளித்தால் போதும்.
தேர்வுக்குத் தயாராவது எப்படி?
ஒவ்வொரு பாடத்திற்கும் பின்னால் இருக்கும் கேள்விகளை மட்டும் படித்தாலே, பாஸ் மார்க் வாங்கி விடலாம். காரணம், இந்தக் கேள்விகளில் இருந்தே தேர்வுக்கு 60 சதவீதம் கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்று விதியிருக்கிறது. உதாரண மாக, ஒரு மதிப்பெண் கேள்வியைப் பொருத்தவரையில் மொத்தமுள்ள 30 கேள்விகளில், 20 முதல் 22 கேள்விகள் இவ்வாறுதான் கேட்கப்படுகின்றன.
நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்றால் 2006-ம் ஆண்டு முதல் 2014 வரை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு கேள்வித்தாள்களில் வந்த கேள்விகளையும் படிக்க வேண்டியது அவசியம். சில எளிய ஐடியாக்களை மனத்தில் வைத்துக் கொள்வது சவால் களை எளிமையாக்கும். உதாரணமாக, ஆக்சினைடுகளின் (அயனிகளின்) நிறங்கள் குறித்த கேள்வி குழப்பம் தரலாம். அதற்கு சாலையில் உள்ள சிக்னல் விளக்கை ஞாபகம் வைத்துக் கொள்ளலாம். U3+ பிளஸ் அயனியின் நிறம் என்ன? என்று கேட்டால், சிக்னல் விளக்கில் 3 எழுத்துள்ள நிறம் எது என்று யோசித்து (RED) சிகப்பு என்று விடை எழுதலாம்.
UO என்ற கேள்விக்கு சிக்னல் விளக்குகளில் ‘ஓ’ என்ற எழுத்து வரும் ஒரே நிறம் ‘யெல்லோ’ என்பதால், மஞ்சள் என்று விடை தரலாம். எஞ்சியிருக்கும், U 4 பிளஸ் அயனியின் நிறம் பச்சை.
சமன்பாடுகளை விரைவாக எழுத வும், அதனை பூர்த்தி செய்யவும் சில எண்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக சில்வர் அல்லது காப்பர், நீர்த்த நைட்ரிக் அமிலத்துடன் இணை என்று கேள்வி வந்தால், காப்பருக்கு 3, 8 என்றும், சில்வருக்கு 3, 4 என்றும் எண்களை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் சமன்பாட்டின் இடதுபுறத் தையும், வலது புறத்தையும் சமப்படுத்த ரொம்பவே உதவியாக இருக்கும்.
ஒரு மதிப்பெண் கேள்விகளைப் பொருத்தவரையில், தொகுதி 1 புத்தகத் தில் இருந்து 15 கேள்விகளும், தொகுதி 2-ல் இருந்து 15 கேள்விகளும் வரும். 2-வது தொகுதியில் மொத்தம் 12 பாடங்கள் உண்டு. இதில், 14, 15, 22 ஆகிய பாடங்களில் இருந்து ஒரு வினா கூட கேட்கப்படாது. அதேபோல 11, 13, 16, 18, 19 ஆகிய பாடங்களில் இருந்து தலா 1 கேள்வி தான் வரும். எனவே, புக் மார்க் (பாடத்திற்கு பின்னால் உள்ள) வினாக்களை மட்டும் படித்தாலே போதும்.
அதே நேரத்தில் 12, 17, 20, 21 ஆகிய 4 பாடங்களை மட்டும் முழுமையாக படிப்பது அவசியம். காரணம், இந்த 4 பாடங்களில் இருந்து மட்டும் 12 கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்த முறைகளை பின்பற்றினால் ஒரு மதிப் பெண் வினாக்களில் 30-க்கு 30 எடுத்து விடலாம். அடுத்து 3 மதிப்பெண் கேள்விகள்.
வேதியியல் பாடத்தில் கனிம வேதியியல், இயற்பியல் வேதியியல், கரிம வேதியியல் என்று முப்பெரும் பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவில் இருந்தும் 7 வினாக்கள் கேட்கப்படுகிறது. 21-ல் 15 கேள்விகளுக்கு பதில் அளித் தால் போதும் என்பதால், கரிம வேதி யியல் பாடத்தில் இருந்து ஒரே ஒரு கேள்வி தானே என்று நினைப்பீர்கள். ஆனால், அந்தப் பாடத்தைப் படிக்காத வர்கள் கட்டாயமாக அந்த ஒற்றைக் கேள்வியில் மதிப்பெண்ணை இழப் பார்கள்.
இதனை தவிர்க்க எளிய வழி இருக் கிறது. இதுவரை வந்த பொதுத் தேர்வு வினாக்களை படித்துவிடுங்கள். அதிலிருந்துதான் அதிக கேள்விகள் கேட்கப்படும் 3, 4, 11, 16-ம் பாடங் களை நன்றாக படிக்க வேண்டும். அதைப்போல, 15, 22 ஆகிய பாடங் கள் மிகவும் சிறிய பாடங்கள். அதை யும் படித்துவிட்டால், நிச்சயமாக 2 கேள் விகளுக்குப் பதில் அளிக்க முடியும்.
5 மதிப்பெண் கேள்விகள்
5 மதிப்பெண் கேள்விகளைப் பொருத்தவரையில் ஏற்கெனவே சொன்னபடி, 3 பிரிவுகளாக கேள்விகள் வரும். ‘ஏ’ பிரிவில் 1, 4, 5, 6 ஆகிய 4 பாடங்களில் இருந்து தலா 1 கேள்வி கேட்கப்படும். ‘பி’ பிரிவில் 9, 10, 11, 14 ஆகிய பாடங்களில் இருந்தும், ‘சி’பிரிவில் 17, 18, 19, 22 ஆகிய பாடங்களில் இருந்தும் தலா 1 கேள்வி கேட்கப்படும்.
வினை வழிமுறைகள் பற்றிய கேள்வி உறுதியாக வரும். 18, 19ம் பாடங்களில் மொத்தம் 6 வினை வழிமுறைகள் தான் உள்ளன. அதில் இருந்து 1 வினை வழிமுறை கட்டாயமாக வந்துவிடும். எனவே, இதனை கவனமாக படியுங்கள். இதில், அம்புக்குறிகள், பிளஸ், மைனஸ் என்று நிறைய குறிகள் வரும். அவற்றை எல்லாம் மிகச் சரியாக எழுதுவது அவசியம். இதில் ஏதாவது சந்தேகம் வந்தால் இந்தக் கேள்வியை தவிர்த்துவிட்டு வேறு எளிதான கேள்விக்குப் போய்விடுங்கள்.
கடைசியாக 10 மதிப்பெண் கேள்வி. ஒவ்வொரு கேள்வியும் ஏ, பி என்று இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கும். ஒரு கேள்வியை தேர்வு செய்தால் இரண்டு உட்கேள்விகளுக்கும் பதில் அளித்தே தீர வேண்டும். விதிப்படி, 64-வது கேள்வி 2, 3-ம் பாடத்தில் இருந்து தேர்வு செய்யப்படுகிறது. அதாவது 64-ஏ 2-ம் பாடத்தில் இருந்தும், 64-பி 3-ம் பாடத்தில் இருந்தும் இடம்பெறும். அதேபோல 65-வது கேள்வி 6, 7-ம் பாடங்களில் இருந்தும், 66-வது கேள்வி 8, 12-ம் பாடங்களில் இருந்தும், 67 கேள்வி 11, 14-ம் பாடங்களில் இருந்தும், 68-வது கேள்வி 15, 19 பாடங்களில் இருந்தும், 69-வது கேள்வி 20, 21 பாடங்களில் இருந்தும் கேட்கப்படுகின்றன. 10 மதிப்பெண் வாங்க நினைப்பவர்கள், இங்கே ஜோடி ஜோடியாக குறிப்பிட்டுள்ள இரு பாடங்களையும் படிக்க வேண்டும். ஜோடியில் ஒரு பாடத்தை விட்டுவிட்டு, ஒரு பாடத்தை மட்டும் படித்தால் 10க்கு 10 வாங்கவே முடியாது.
வேதியியல் வினாத்தாளின் கடைசி கேள்வி 70-வது கேள்வி. இது கட்டாயம் பதிலளிக்க வேண்டிய கேள்வி. ஆனால், 70 ‘ஏ மற்றும் பி’ அல்லது ‘பி மற்றும் சி’க்கு பதில் அளித்தால் போதும் என்ற சலுகை உண்டு. ஏ கேள்வி 16-ம் பாடத்தில் இருந்தும், பி கேள்வி 4-ம் பாடத்தில் இருந்தும் இடம்பெறும். அதேபோலவே சி கேள்வி 18-ம் பாடத்தில் இருந்தும், டி கேள்வி 13-ம் பாடத்தில் இருந்தும் கேட்கப்படும். இந்த நுட்பங்களை எல்லாம் அறிந்து படிப்பது, 200க்கு 200 பெற நிச்சயமாக உதவும்.
ஆர். அழகப்பன், வேதியியல் பாடத்தில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர், மதுரை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)